சட்டத்தின் முன் அனைவரும் சமம்

top-news

புத்ராஜெயா, ஜன. 16

மலேசிய ஆயுதப்படை (ATM) தொடர்பான ஊழல் விசாரணைகள், நாட்டில் சட்டத்தின் ஆட்சி, பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்தும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணம் சுத்திகரிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் தரைப்படைத் தலைமைத் தளபதி (PTD) உட்பட குறைந்தது நான்கு மூத்த ATM அதிகாரிகள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளனர்.

இந்த நடவடிக்கை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னெடுத்த இரண்டு முக்கிய விசாரணைகளின் தொடர்ச்சியாகும். ‘ஆப் பாராசிட்’ (Op Parasit) என அழைக்கப்படும் விசாரணை முன்னாள் PTD தொடர்புடையதாகவும், ‘ஆப் ஸ்டார்’ (Op Star) முன்னாள் மூத்த ATM அதிகாரிகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இவ்விரு விசாரணைகளும் ATM-இல் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் தெண்டர் நடைமுறைகளில் ஏற்பட்ட முறைகேடுகளை மையமாகக் கொண்டவை.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *