கோயில் சர்ச்சை: அமைதியைக் காக்க அரசு எம்.பிக்கள் அழைப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  பிப் 12: அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படும் ஆலயங்கள் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அமைதியுடன் இருந்து சமூக ஒற்றுமையை முன்னிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாங்கி எம்.பி சியாஹ்ரெட்சான் ஜோஹான், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து மக்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சிக்கும் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார். ஆலயங்களைச் சார்ந்த விஷயங்களில் உணர்ச்சி வசப்படாமல், ஒற்றுமையை காக்க வேண்டும் என்று அவர் கூறினர.

ஜெலுத்தோங்க் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், வழிபாட்டு தலங்களைச் சார்ந்த பிரச்சினைகள் உரையாடல் மற்றும் சட்ட வழிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றார். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆலய நிர்வாகங்களுடன் சந்திக்கத் தயார் என்றும் கூறினார்.

மானா கட்சியின் லு லாங்கட் நாடாளுமன்ற உறுப்பினர்  சானி ஹம்சான், சட்டவிரோதமாக கட்டப்பட்ட அமைப்புகள் குறித்து அதிருப்தி இருந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில், ரவாங் பகுதியில் உள்ள இந்து ஆலயத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாக கூறி நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அமைதிக்கேடு, வழிபாட்டு தல சேதம் மற்றும் சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வழிபாட்டு தலங்கள் தொடர்பாக யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்றும், மலேசியாவில் சட்டமே மேலோங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்!அ

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *