மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோயில் இட மாற்றம் மறு பரிசீலனை! - சிலாங்கூர் அரசு முடிவு
- Shan Siva
- 23 Apr, 2026
ஷா ஆலம், ஏப் 23 : ஷா ஆலம் தாமான் மேடானில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை இடமாற்றம் செய்வதற்கான முன்மொழியப்பட்ட இடத்தை, அப்பகுதி மக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்யவுள்ளது.
மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு குழுவின் தலைவர் வி. பப்பாராயுடு, அப்பகுதி மக்கள் எழுப்பிய கவலைகளைக் கருத்தில் கொண்டு, மார்ச் 5 அன்று மாநில நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் சங்கம், மாற்று இடத்திற்காக ஏற்கனவே ஒரு புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், உள்ளாட்சி அமைப்பிடமிருந்து திட்ட அனுமதி பெற்ற பின்னரே, முறையான கட்டிடம் கட்டும் பணியைத் தொடர அந்தச் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மாநிலத்தில் உரிமம் பெறாத வழிபாட்டுத் தலங்கள் இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக டாக்டர் அஃபிஃப் பஹார்டின் எழுப்பிய கேள்விக்கு பப்பாராயுடு இவ்வறு பதிலளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தாமான் மேடானில் உள்ள பிஜேஎஸ் 2 பகுதியைச் சேர்ந்த சுமார் 80 குடியிருப்பாளர்கள், பிஜேஎஸ் 4 பகுதியிலிருந்து மலாய்-முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிக்கு ஒரு கோயிலை இடமாற்றம் செய்ய மாநில அரசு அளித்த ஒப்புதலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



