வண்ணத்தின் அடிப்படையில் இனி கோயில்கள்! - தேசிய இந்து கோயில்கள் வழிகாட்டுதல் குழு விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 23: பதிவு மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டு வரும் இந்து கோவில்களுக்கு உதவுவதற்காக நான்கு நிறங்கள் அடிப்படையிலான ஒருமுறையை தேசிய இந்து கோயில்கள் வழிகாட்டுதல் குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

குழு வெளியிட்ட அறிக்கையில், கோவில்களை தன்னிச்சையாக பதிவு செய்வது தங்களின் நோக்கம் அல்ல. சட்டப்படி சரியான மற்றும் பொருத்தமான வழிமுறையை அடையாளம் காண உதவுவதே தங்கள் பணியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை Malaysia Hindu Sangam தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பதிவு செய்யப்படாத கோவில்களின் பிரச்சினை தேசிய மட்டத்தில் கவலைக்குரியதாக மாறிவருகிறது என கூறப்பட்டுள்ளது. இது சரியான முறையில் நிர்வகிக்கப்படாவிட்டால் சமூக ஒற்றுமைக்கும், நாட்டின் நிலைத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே கோயில்களின் தற்போதையை நிலையைக் குறிப்பிட நிற அடிப்படையை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் முழுமையான ஆவணங்கள், கசேட் அந்தஸ்து மற்றும் உரிய நில உரிமை அல்லது அரசின் அனுமதி பெற்ற கோவில்கள்.சட்டபூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்டதாக கருதப்படுகின்றன. இவை பச்சை நிறமாக குறிக்கப்படுகிறது.

தனியார் நிலம் அல்லது முஸ்லிமல்லாத வழிபாட்டு தலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரிபி (RIBI) நிலங்களில் அமைந்துள்ள கோயில்கள். ஆனால் கசேட் அந்தஸ்து அல்லது நில உரிமை ஆவணங்கள் இன்னும் பெறாமல் இருக்கும் கோயில்கள் மஞ்சள் நிறத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு நிலம், அரசு நிறுவன நிலம், தனியார் அல்லது எஸ்டேட் நிலங்களில் இருந்தாலும், உரிய நில உரிமையாளர்களின் அனுமதி அல்லது ஒப்பந்தம் கொண்ட கோவில்கள். இவ்வகையில் உள்ள கோவில்களுக்கு நிலம் வாங்க உதவுதல் அல்லது அரசிடம் இருந்து ரிபி நிலம் பெற உதவுதல் போன்ற வழிகள் ஆராயப்படும். இவை ஆரஞ்சு நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவித ஆவணங்களும், அனுமதிகளும் அல்லது ஒப்பந்தங்களும் இல்லாத கோவில்கள். சாத்தியமான தீர்வாக, பதிவு செய்யப்பட்ட கோவில்களுடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படலாம். இவை சிவப்பு நிற குறீயிட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்கு சுமார் 450 கோவில்கள் பதிலளித்துள்ளன. மீதமுள்ள கோவில்களும் தங்களது விவரங்களை சமர்ப்பிக்குமாறு குழு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, இக்கோவில்களில் பலவும் நவீன நகரமைப்பு மற்றும் நில நிர்வாக சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பே கட்டப்பட்டவை என்பதால், சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்கள் உருவாகியுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறப்படும் கோவில்களை இடிக்க ஆறு மாத இடைக்காலத் தடை (moratorium) விதிக்க அரசை கேட்டுக்கொண்டதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *