நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள்! - பாப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி
- Shan Siva
- 16 Sep, 2025
பாப்பார், செப் 16: நேற்று, சபா பாப்பாரில் உள்ள
கம்போங் மூக் மற்றும் கம்போங் மராங் துண்டுல் ஆகிய இரண்டு கிராமங்களைத் தாக்கிய
நிலச்சரிவு துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டுவசதி உதவி
வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக லிம்பாவ் சட்டமன்ற
உறுப்பினர் டத்தோ ஜூயில் நுவாடிமுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக பாப்பார்
நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி, கூறினார்.
இந்த உதவி நேற்று
முதலமைச்சர் அறிவித்த RM10,000 இறப்பு
உதவித்தொகை தவிர்த்து, மேலும் கூடுதலாக
வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இப்போதைக்கு,
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
தற்காலிக வீடுகளை வழங்குவோம் என்று அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், தற்போதைக்கு, இரு
குடும்பங்களும் கம்போங் மூக் மற்றும் கம்போங் மராங் துண்டுலில் உள்ள சமூகக்
கூடங்களில் (தற்காலிக நிவாரண மையங்கள்) தங்க வைக்கப்படுவார்கள்.
மலைச்சரிவுகளுக்கு அருகிலுள்ள அவர்களின் வீடுகளில் ஆபத்து மதிப்பீடு நடத்தப்படும் அதே வேளையில், அவர்களை தற்காலிகமாக மக்கள் வீட்டுவசதித் திட்டம் (PPR) அலகு அல்லது வாடகை வீட்டிற்கு மாற்றுவது குறித்தும் நாங்கள் குடும்பங்களுடன் விவாதிப்போம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



