புதிய சபாவை" உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் - அன்வார்!
- Muthu Kumar
- 16 Nov, 2025
கோலாலம்பூர், நவ 16:
அடுத்த சபா மாநில அரசாங்கம், மாநிலத்தின் பரந்த திறனை உணர அனைத்து துறைகளிலும் திட்டங்களையும் முன்னேற்றத்தையும் மேம்படுத்துவதன் மூலம், ஒரு "புதிய சபாவை" உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.
கோத்த கினபாலுவில் சீன சமூகத்தினருடன் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் பேசிய அவர், நவம்பர் 29 அன்று மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தால் சபா தொடர்ந்து பாதிக்கப்படுவதை விரும்பவில்லை என்று கூறினார்.அடுத்து அமையவிருக்கும் சபா மாநில அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு அனைத்து வளர்ச்சியையும் ஆராய வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலத் தேர்தல்களில் குறைவான இடங்களில் போட்டியிட்ட போதிலும், மாநில நிர்வாகம் மிக உயர்ந்த தரத்தில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் PH தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.சீன சமூகத்துடன் பிரீமியர் டாக் அண்ட் டின்னர் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில், டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணிலோக்கும் கலந்துகொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



