செயற்கை நுண்ணறிவை கற்றுக்கொள்வதில் நாம் பின்தங்கிவிடக்கூடாது! - அன்வார்
- Shan Siva
- 27 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 27: செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) கற்றுத் தேர்வதில் மலேசியா ஒரு போதும் பின்தங்கியிருக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உலகளாவிய இலக்கவியல் மாற்றத்தை எதிர்கொள்வதில் மலேசியா மீண்டெழும்
தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு புதிய திறன்களையும் தொழில்நுட்பங்களையும்
பெறுவதற்கான நாட்டின் திறன் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
5ஜி
மற்றும் ஏ.ஐ. ஆற்றலை மேம்படுத்தவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம் என்பதோடு, தவறினால் நமது பிள்ளைகள் சிறந்த வேலைகளைப் பெற
முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
செல்கோம் டிஜி நிறுவனம்
ஏற்பாடு செய்த CD:NXT திட்டத்தை நேற்று தொடக்கி
வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



