நாம் இன வேற்றுமைகள் இல்லாமல் உயர வேண்டும்! மலேசியாவின் ஒற்றுமை விலை மதிப்பற்றது! - அன்வார் சிறப்புரை

top-news
FREE WEBSITE AD

செர்டாங், ஆக 30: மலேசியா நீண்ட காலமாக நாட்டை பலவீனப்படுத்தியுள்ள ஊழல், கடத்தல் மற்றும் சட்டவிரோத ஏகபோக வணிக கூட்டணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்போதுதான் மலேசியாவின் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார்.

இது பல காலமாக நாட்டின் போராட்டமாக இருந்து வருகிறது. ஆனால் அரசியல் நிலைப்பாட்டின் மூலம், நாம் அதை வெல்ல முடியும் என்று அவர் கூறினார்.

மலேசியாவின் பலம் அதன் மக்களிடம்தான் உள்ளது. அவர்கள் தொடர்ந்து ஊழல் நடைமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.

இந்தத் தவறுகளை நாம் முற்றிலுமாக நிறுத்த முடிந்ததா? என்று கேள்வி எழுப்பிய அவர்,  இன்னும் உள்ளதாகக் கூறினார்.

அதனால்தான் சுதந்திரத்தின் உணர்வு என்பது இந்த நாட்டை ஊழல், கடத்தல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்தும் பாதுகாத்து விடுவிப்பதாக இருக்க வேண்டும் என்று தாம் வலியுறுதவதாக அவர் கூறினார். நமது மக்களை விடுவிப்பதற்கும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஒழிப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் தனது மெர்டேகா தின சிறப்பு உரையில் கூறினார்.

மலேசியா சரியாக இல்லாவிட்டாலும், அது அசாதாரண வலிமையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மலேசியாவைப் போல வலிமையான மற்றும் சிறந்த மற்றொரு நாட்டைக் கண்டுபிடியுங்கள். இந்த உணர்வின் உண்மையான சாம்பியன்களான மலேசியர்களை தாம் வணங்குவதாக பிரதமர் தெரிவித்தார்..

நிச்சயமாக, நம்மை சோதிக்கும் சவால்கள் உள்ளன. மாற்றங்கள் முன்மொழியப்படும் போதெல்லாம், இனப் பிரச்சினைகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. அவை நமது ஒற்றுமையை பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், நமது பெரும்பான்மையான மக்கள் நமது வலிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய உணர்வுகளுக்குப் பதிலாக உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பார்த்து ஞானத்தைப் பயன்படுத்துவதற்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

ஏகபோகங்களை அகற்றுவதற்கும் மக்களைச் சுரண்டும் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கும் தனது நிர்வாகம் உறுதியாக இருப்பதாக அன்வார் கூறினார்.

ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும், எந்தப் பிரச்சினையும் விவாதிக்கப்படாமல் விடப்படுவதில்லை. அது கல்வியாக இருந்தாலும் சரி, பொருட்களின் விலையாக இருந்தாலும் சரி, போதைப்பொருட்களாக இருந்தாலும் சரி, அல்லது கோழியின் விலையாக இருந்தாலும் சரி, இந்த விஷயங்கள் முழுமையாக விவாதிக்கப்படுகின்றன.

உலகளாவிய விலைகள் உயர்ந்து வருவதை நாங்கள் அறிவோம், ஆனால் இந்த அரசாங்கம் கூட்டுத் தடைகளை உடைத்து, இந்த நாட்டிற்கு தீங்கு விளைவிக்க சட்டவிரோத மற்றும் துரோக வழிகளைப் பயன்படுத்துபவர்களுடன் தொடர்ந்து போராடுகிறது. "நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்," என்று அவர் கூறினார்.

பிரிவினை அரசியலுக்கு அப்பால் எழுந்திருங்கள்

பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அன்வார் அழைப்பு விடுத்தார்.  மலேசியா கட்சி சார்ந்த நிகழ்ச்சி நிரல்கள் அல்லது இன உணர்வுகளை விட மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

ஒவ்வொரு திட்டமும் இனத்தின் கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்கப்பட்டால், மக்களைப் பிரிக்க முயல்பவர்களால் தூண்டப்பட்டால் எந்த நாடும் வலுவாக நிற்க முடியாது.

நாம் இனத்திற்கு அப்பால் உயர வேண்டும். ஆம், நான் மலாய்க்காரன், என் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், அந்தப் பெருமை ஒருபோதும் மற்றவர்களின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது மறுப்பதோ காரணமாக இருக்கக்கூடாது. இது ஒரு Zero – Sum விளையாட்டு அல்ல” என்று அவர் கூறினார்.

சீனர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர், இந்தியர்கள் ஆழமான மரபுகளைக் கொண்டுள்ளனர்,

மலேசியாவின் ஒற்றுமை விலைமதிப்பற்றது என்றும், சகிப்புத்தன்மையின் அடிப்படையில் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் உண்மையான மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *