காணாமல் போன தாய் மற்றும் ஐந்து பிள்ளைகள் பாதுகாப்பாக கண்டுபிடிப்பு
- Surendran Sumdraraj
- 02 Apr, 2026
குவாந்தான், ஏப். 2-
மார்ச் 30 முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணும், அவரது ஐந்து பிள்ளைகளும் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸையாம் முகமது கஹார் தெரிவித்ததார்.
சம்பந்தப்பட்டவர்கள் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் பெந்தோங் காவல் நிலையத்திற்குத் தாமாகவே வந்துள்ளதாக கூறினார்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலையில் இருந்ததாகவும், எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஆரம்ப விசாரணையில் குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் வழங்கி, தேடுதல் பணிகளில் ஒத்துழைத்த பெந்தோங் பகுதி மக்களுக்கு போலீசார் நன்றியை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



