பினாங்கில் காகங்களால் எல்லை மீறும் தொல்லைகள் கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகர் மன்றம்!

top-news
FREE WEBSITE AD

ல்(ஆர்.ரமணி)

பினாங்கு, ஏப். 24-

பினாங்கு மாநிலத்தில் நாளுக்கு நாள் எல்லை மீறும் வகையில் தொல்லை தரும் காகங்களுக்கு எதிராக தீவிர துடைத்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்பறவை இனங்களை பினாங்கு மாநிலத்தில் துப்பாக்கியால் சுடுவோர் கழகத்தில் திறன் பயிற்சி பெற்ற 4 நபர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வண்ணம் மாநிலத்தில் காக்கைகள் பெருமளவில் காணப்படும் இங்கிருக்கும் மெக்காலிஸ்டர் சாலையில் இவற்றை சுடும் பணி முதற் கட்டமாக செயல்படுத்தப்பட்ட போது, மொத்தம் 93 காகங்கள் அவ்வாறு பலியாகியதாக கணக்கிடப்பட்டது.இந்த நடவடிக்கை மாநில காவல்துறை வழங்கிய அனுமதிக்குப் பின்னரே, மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காகங்களுக்கு எதிரான இந்த சுடும் நடவடிக்கை (Standard Operating Procedure) என்றழைக்கப்படும் சீர்தர இயக்கச் செய்முறை பேரில் மேற்கொள்ள வேண்டி காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதால், அவ்வாறே இந்த ஒழிப்புப் பணி செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மாநகர் மன்றம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

காகம் ஒரு தொல்லையுயிரி (PEST) இனமென்றும் அது மூர்க்கத்தன்மை கொண்டதென்றும் ஆய்வியலில் கண்டறியப்பட்டுள்ளதன் பேரிலேயே, இதன் ஒழிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பறவை இனங்களின் தொல்லை பல சந்தர்ப்பங்களில் கடுமையான நிலையில், அத்துமீறும் அபாயத்திற்கும் இட்டுச் செல்வதை மறுப்பதற்கில்லை என்றும் விவரிக்கப்பட்டது.

இதனிடையே பினாங்கு மாநிலத்தில் காகங்களின் தொல்லை அதிகமாகக் காணப்படும் ஏறத்தாழ 29 விபரீதமிக்க பகுதிகளை மாநகர் மன்றம் அடையாளம் கண்டிருக்கும் நிலையில் அவ்விடங்களில் அவற்றுக்கான பொறி வகைக் கூண்டுகளை பொருத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

Di Pulau Pinang, tindakan tembak kawalan terhadap gagak dijalankan selepas mendapat kelulusan polis. Empat individu terlatih ditugaskan, dan 93 gagak telah dihapuskan di Jalan Macalister. 29 kawasan dikenal pasti untuk pemasangan perangkap khas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *