கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றலைக் கொண்ட கண்காட்சிக்கு பினாங்கில் வரவேற்பு!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பத்து கவான், ஆக. 8-

பினாங்கு மாநிலத்தில் UOW மற்றும் KDU ஆகிய இரு பிரதான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்பாற்றல் திறனை சிறப்புடன் வெளிப்படுத்துக் கூடிய "கதவுக்கு அப்பால் காணப்படாத பகுதிகள் என்ற கருப்பொருளிலான ஒரு கண்காட்சி, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சுற்றுச்சூழல் துறை ஏற்பாட்டில், இங்கு இளைய சமூகத்தினர் மத்தியில் திரையிட்டு காட்டப்பட்டது.

சமூக பொறுப்புணர்வைக் கொண்ட மாணவர்களின் தூரநோக்கு சிந்தனையை மூலாதாரமாக வெளிப்படுத்தும் இந்த படைப்பாற்றல் கண்காட்சி, அவர்களின் ஆராய்ச்சித் திறனை நன்கு புலப்படுத்தக் கூடிய வகையில் உணர்வுப்பூர்வமானதாக மட்டுமல்லாது,, சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை உணர்த்தும் விதத்திலும் அமைந்திருந்ததால் இதனை கண்ணுற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியது.

இந்த கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய புக்கிட் தம்புன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ சூன் எயிக், இந்தப் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தியிருக்கும் மாணவர்களின் கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் நகரத் திட்டமிடல் அம்சங்களுடன் ஒத்திசைந்து, எதிர்கால நலனுக்கு முக்கியத்துவமளிக்கும் விதத்தில் மேலோங்கியிருப்பது தொடர்பில் பாராட்டு தெரிவித்தார்.

மலேசியக் கட்டடக் கலை வாரியத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி வெனெஸா செபாஸ்தியன் என்ற மாணவியால் வழிநடத்தப்பட்ட வேளையில், ஷீமா என்ற உள்கட்ட வடிவமைப்பு மாணவியும், குப்ரியதா என்ற நரம்பியல் பிரிவுக்கான மாணவியும் கண்காட்சிக்கான விளக்கவுரைகளை நிகழ்த்தி பார்வையாளர்கள் மத்தியில் சபாஷ் பெற்றனர்.

பத்து கவான், தொழில் துறை மண்டலமாக
அபரிமித வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், இங்கு குடியிருப்பு மையங்களும் பெருகிக் கொண்டிருக்கும் பட்சத்தில், இங்கு நிகழ்வதற்கான சாத்தியக் கூறு அம்சங்களை முன்னதாகவே எடுத்துக் காட்டும் வகையில் அபாரத் திறனுடன் செயல்பட்டிருக்கும் இந்த கண்காட்சியின் மாணவர் குழுவினர் யாவரும் ஒருசேர பாராட்டையும் பெற்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *