துன் மகாதீரின் பேத்தி வீட்டில் திருடிய நபர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், ஆக. 9-

கடந்த மாதம் 21ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் புக்கிட் டாமன்சாராவில் உள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் பேத்தி வீட்டில் 4 ஆடவர்கள் பாராங்கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையிட்டனர்.அங்கிருந்து ஒரு லட்சம் வெள்ளி ரொக்கம், 1 விலையுயர்ந்த கைக்கடிகாரம், 3 தங்கக்கட்டிகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸார் 2 ஆடவர்களை கைது செய்தனர். விசாரணை முடிந்த பின் நேற்று காலை 2 பேரும் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் செக்ஷன் 395 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் இரு ஆடவர்களைத் தேடி போலீஸார் வலைவீசி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *