கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 23: எந்தவொரு பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களும், மாநிலத்தின் தேவைகளையும் தற்போதுள்ள வளர்ச்சி உத்திகளையும் கருத்தில் கொண்டு கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வத் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கம்போங் பஹாகியாவை முறையான வீட்டு வசதிகளுடன் புனரமைப்பதற்கான திட்டங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், இது தொடர்பாக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நூருடன் விவாதிக்கப்பட்டதாகவும்  அன்வார்கூறினார்.

இந்தத் திட்டத்திற்கு, மாவட்டம் மற்றும் மாநிலம் உட்பட பல்வேறு மட்டங்களில் விரிவான பரிசீலனையும், மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டம் மிகவும் பெரியது மற்றும் கவனமான திட்டமிடல் தேவைப்படுவதால், இவை அனைத்தும் முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவசரமாக ஒரு முடிவை எடுப்பது பொருத்தமானது என்று தாம் நினைக்கவில்லை. சிறிது பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்வதாக  அவர் நேற்று பத்து சாபி) தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *