தவிக்கும் வெனிசுலா! 1,430 பேர் மரணம்! 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்!
- Shan Siva
- 28 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 28: வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் அந்நாட்டையே சிதைத்துள்ளது. இந்த நிலநடுக்கப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 1,430-ஐ எட்டியது.
மேலும், லட்சக்கணக்கான மக்கள் சுகாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் இன்றி தவிப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் உள்ளூர் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த பொதுமக்களின் சீற்றத்தை வெனிசுலாவின் அமெரிக்க ஆதரவு பெற்ற இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் எதிர்கொண்டு வருகிழ்ரார்.
புதன்கிழமை ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் இடிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றுவதில் உள்ளூர்வாசிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்றும், 50,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.நா. உதவித் தலைவர் டாம் பிளெட்சர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த நில நடுக்கத்தால் 67.6 லட்சம் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என்றும், அவர்களுக்கு அவசர தங்குமிடம், பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை சேவைகள், மருத்துவப் பராமரிப்பு, பாதுகாப்பு ஆதரவு மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என்றும் ஐ.நா. இடம்பெயர்வு முகமை தெரிவித்தது.
1,430 பேர் உயிரிழந்ததாகவும், 3,238 பேர் காயமடைந்ததாகவும் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் நேற்று தெரிவித்தார். அதே நேரத்தில், ஐ.நா. 6.7 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்களையும் மதிப்பிட்டுள்ளது. இது வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காட்டிற்குச் சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகச் சரிந்துவரும் பொருளாதாரம் மற்றும் ஜனவரியில் தலைவர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்ட தலையீட்டால் ஏற்பட்ட கொந்தளிப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வெனிசுலா மக்கள், அரசாங்கத்தின் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



