இங்கிலாந்து அணி செர்பியாவை 5-0 என வீழ்த்தியது
- Tamil Malar (Reporter)
- 10 Sep, 2025
பெல்கிரேட், செப். 11-
செய்தி-வெற்றி மைந்தன்
இங்கிலாந்து கால்பந்து அணி, அடுத்த ஆண்டு
நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு மிக அருகில் உள்ளது. குழு கேவில் நடைபெற்ற போட்டியில் செர்பியாவை 5-0 என்ற கோல்
கணக்கில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் முதல் கோலை அடித்து
ஆட்டத்தைத் தொடங்கினார்.
கேன், தனது 74ஆவது கோலுடன்
இங்கிலாந்துக்காக புதிய சாதனையைப் படைத்தார். நோனி மடுவேகே, எஸ்ரி
கோன்சா, மார்க் குயேஹி ஆகியோர் தங்களது முதல் அனைத்துலக மூத்த அணி கோல்களைப் பதிவு செய்தனர். மார்கஸ் ராஷ்போர்டு ஆட்டத்தின்
இறுதியில் பெனால்டி மூலம் கோல் அடித்து வெற்றியை முழுமையாக்கினார்.
இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று
அதிகபட்சமாக 15 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த மாதம் குழு
சாம்பியனாக தகுதியை உறுதி செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆண்டோராவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது, அணியின் மந்தமான
ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், இந்த முறை தாமஸ்
டச்சல் பயிற்சியின் கீழ் இயங்கும் இங்கிலாந்து அணி, ஜெர்மனியைச்
சேர்ந்த இந்தப் பயிற்சியாளர் பொறுப்பேற்ற பிறகு தங்களது சிறந்த ஆட்டத்தை
வெளிப்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



