பெங் ஹோக்கின் விவகாரம்-ஐநா மனித உரிமை ஆணையத்திடம் நீதி கோர நிதி வசூலிப்பு!
- Muthu Kumar
- 04 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 4-
2009ஆம் ஆண்டு ஷா ஆலம் ஊழல் தடுப்பு ஆணைய கட்டடத்தில் தியோ பெங் ஹோக் இறந்து கிடந்த சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காததை ஜெனிவாவில் உள்ள ஐநாவின் கீழுள்ள மனித உரிமை ஆணைய சிறப்பு அதிகாரியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிதி வசூலிப்பு நடவடிக்கைக்கு இதுவரை மொத்தம் 122.377 ரிங்கிட் திரட்டப்பட்டிருப்பதாக மறைந்த தியோ பெங் ஹோக் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக முன்னெடுப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.
தற்போது திரட்டப்பட்டுள்ள நிதியானது உத்தேச நிதியான 50,000 ஆயிரம் வெள்ளிக்கு மேல் தாண்டி இருப்பதால், இனிமேலும் நிதி தேவைப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் நிதியானது ஆண்டுதோறும் பெங் ஹோக்கின் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அது சம்பந்தமான கருத்தரங்குகளையும் நடத்தப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



