டெங்கு இறப்புகள் குறைந்துள்ளது! – சுகாதார அமைச்சர் தகவல்
- Shan Siva
- 15 Dec, 2025
புத்ராஜெயா, டிச 15: நாட்டில் டெங்குவால் ஏற்படும் இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 43 ஆக 61.3 சதவீதம் குறைந்து இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.
டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கு
பாதிப்புகள் 56.5 சதவீதம் குறைந்து 51,046 ஆக குறைந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 1,18,291 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 56.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாத
இறுதியில், இந்த எண்ணிக்கையை 51,046 என்ற எண்ணிக்கையில்
பராமரிக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.
டெங்கு பாதிப்புகளைக்
கட்டுப்படுத்துவதில் பொது சுகாதார திட்டங்கள், நோய் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து
தரப்பினருக்கும் வாழ்த்துகள் என்று அவர்
இன்று புத்ராஜெயா வோல்பாச்சியா பூச்சிக்கொல்லி மையத்தைத் திறந்து வைத்து பிறகு கூறினார்.
இதில் பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா
முஸ்தபாவும் கலந்து கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



