ஜப்பான் ஓபன் பட்டம் வெல்லும் பயணத்தைத் தொடங்கியது ஆடவர் இரட்டையர் அணி!
- Muthu Kumar
- 17 Jul, 2025
தோக்கியோ, ஜூலை 17-
மலேசியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் ஜோடியான ஸீ பெய், நூர் இஸ்ஸுதின் ரும்சானி, 2025 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தங்கள் பட்டத்தைப் பாதுகாக்கும் பயணத்தை அபாரமான வெற்றியுடன் தொடங்கினர். உலகின் நம்பர் 1 ஜோடியான இவர்கள், முதல் சுற்றில் தைவானின் லு மிங்-சே. டாங் சி ஹாவ் ஆகியோரை 21-15, 21-12 என்ற நேர் செட்களில் 35 நிமிடங்களில் வீழ்த்தினர். இந்த வெற்றி, ஜூலை 22 முதல் 27 வரை தோக்கியோ மெட்ரோபோலிடன் ஜிம்னாசியத்தில் நடைபெறும். இந்த சூப்பர் 750 தொடரில் அவர்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.
கடந்த ஆண்டு ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸீ பெய் -இஸ்ஸுதின், இந்த ஆண்டு தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளனர். 2024 ஆம் ஆண்டு இவர்கள் சீன ஓபன், ஆர்க்டிக் ஓபன், இந்தியா ஓபனில் வெற்றி பெற்று, மூன்று பட்டங்களை கைப்பற்றியிருந்தனர்.
இரண்டாவது சுற்றில், இவர்கள் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னாண்டோ-டேனியல் மார்டின் ஜோடியை எதிர்கொள்வார்கள். இந்த ஆண்டு ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர்கள், தொடர்ந்து தங்கள் ஆட்டத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



