தீவிரவாதப் போக்குடையவர்கள் பிரதமராக முடியாது!
- Muthu Kumar
- 10 Oct, 2025
கோத்தாகினபாலு, அக். 10-
தாங்கள்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கருதும் தலைவர்களின் போக்கினால்தான், அரசியல் கட்சிகளுக்குள் நிலைத்தன்மையற்ற சூழல் உருவாகியுள்ளதற்கு முக்கிய காரணம்.அதோடு, நாட்டை சிறப்பாக நிர்வகிப்பதற்குத் தேவையான தூர நோக்கத்தையும் அத்தகையோர் கொண்டிருக்கவும் இல்லை என்று, அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பதவியை அதிகமான தலைவர்கள் குறிவைத்திருப்பதாகவும் ஆனால், நாட்டை ஆக்கப்பூர்வத்துடன் நிர்வகிப்பதற்காக அமல்படுத்தப்படக் கூடிய அளவுக்கு தீர்க்கமான எண்ணங்களையோ அல்லது திட்டங்களையோ அவர்களிடம் காண முடியவில்லை என்றும், ஒரு நேர்காணலில் தெங்கு ரஸாலி தெரிவித்தார்.
"அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனர் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களின் செயல்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடும். இது கச்சாங் பூத்தே விற்கும் தொழில் போன்றதல்ல. இதுவாவது அவர்களுக்குத் தெரியுமா?" என்று, பிரதமர் பதவியை வகித்து நாட்டை நிர்வகிப்பதில் நிலவும் சிக்கலான சூழ்நிலை குறித்து கருத்துரைக்கும்போது, முன்னாள் நிதி அமைச்சருமான தெங்கு ரஸாலி குறிப்பிட்டார்.
தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதைக் காட்டிலும், தனிப்பட்ட விவகாரங்கள் மீது அரசியல் தலைவர்கள் முக்கியத்துவம் செலுத்தி வருவதன் காரணத்தினால், நாட்டில் நிலைத்தன்மையற்ற அரசியல் மேலும் மோசமடைந்து வருவதாக, அம்னோவின் ஆலோசகருமான அவர் தெரிவித்தார்.
"அவர்களின் சித்தாந்தங்கள் பெரும்பாலும் லட்சியம் அல்லது அபிலாஷைகளினால் இயக்கப்படுகின்றன. ஆனால் உண்மையான தலைமைத்துவம் என்பது, பலவீனமானவர்கள் மற்றும் வலிமையானவர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவர்கள் என அனைவரையும் அரவணைப்பதாகும்” என்று தெங்கு ரஸாலி தெரிவித்தார்.
பெர்சத்து கட்சித் தலைவர் முஹிடின் யாசின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அதன் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி மீதான வெளிப்படையான
தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் அக்கட்சிக்குள் நிகழ்ந்த சண்டை குறித்து கருத்துரைக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.ஒரு நல்ல தலைவர் என்பவர், குறிப்பாக மலேசியா போன்ற பல்லின மற்றும் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் ஒரு நாட்டை நிர்வகிக்கும்போது, அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக இருக்க வேண்டும் என்று கூ லி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெங்கு ரஸாலி குறிப்பிட்டார்.
அணுகுமுறைகளை பின்பற்றிய சரியான தலைவர்களான துங்கு அப்துல் ரகுமான் புத்ரா,துன் அப்துல் ரசாக் உசேன், துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் மற்றும் துன் வீ.தி. சம்பந்தன் போன்ற தலைவர்களை நாம் பெற்றிருந்தது நமது அதிர்ஷ்டம். “அவர்கள் நம்மை தீவிரவாத நிலைக்குக் கொண்டு செல்லவில்லை. இது, நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளப் போகும் ஒரு நாடு என்பதை நினைவூட்டுவதற்கு இதுபோன்ற தலைவர்கள் தேவைப்பட்டனர்.
“ஒரு பொறுப்பான பதவியில் நீங்கள் அமர்த்தப்படும்போது, நீங்கள் ஒரு குழு அல்லது பிரிவினரை மட்டும் கவனித்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் முழு நாட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நியாயமும் சமநிலையும் தேவை. தீவிரவாதப் போக்குகள் களையப்பட வேண்டும்" என்று, அவர் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமையின் முக்கிய அம்சமான மிதவாதத்தைக் கடைப் பிடித்ததற்காக, மலேசியாவின் ஸ்தாபகத் தந்தையர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். "சரியான
தீவிரவாதப் போக்கைப் பின்பற்றும் கட்சிகளினால் மலேசியாவை நிச்சயமாக நிர்வகிக்க முடியாது என்று, 11 தவணை குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான தெங்கு ரஸாலி, தீர்க்கமாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



