தைப்பூசக் காவடியைக் கேலியாகச் சித்தரித்திருப்பது ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையும்! - பிரதமர்

top-news
FREE WEBSITE AD

தேசிய நல்லிணக்கத்தை அச்சுறுத்த வேண்டாம் என்று Era FM சலசலப்புக்குப் பிறகு பிரதமர் நினைவூட்டியுள்ளார்.

இதுபோன்ற 3R சர்ச்சைகளைத் தவிர்த்து, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒற்றுமையின் நாதமாக விளங்கும் ருகூன் நெகாராவை அனைத்து குடிமக்களும் ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

தைப்பூசம் காவடி நிகழ்வைக் கேலி செய்வது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட வீடியோ ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் தங்கள் அறிக்கைகள் அல்லது செயல்களில் 3R சர்ச்சைகள் இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,  பரஸ்பர மரியாதை மற்றும் அன்பை முன்னிலைப்படுத்துங்கள் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக,  சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட ஏரா எஃப்எம் வானொலி தொகுப்பாளர்கள் - நபில் அகமது, ஆசாத் ஜாஸ்மின் மற்றும் ராடின் அமீர் எஃபெண்டி அகமது அருவானி ஆகிய மூவரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, பொது மன்னிப்பு கோரினர்.

நிலையத்தின் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோ மீதான சர்ச்சையைத் தொடர்ந்து ஆஸ்ட்ரோ ஆடியோ மூவரையும் இடைநீக்கம் செய்துள்ளது!

Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim mengingatkan semua pihak agar tidak mengancam keharmonian negara dan mengelakkan isu sensitif 3R. Beliau menegaskan kepentingan Rukun Negara dalam memupuk perpaduan. Selepas kontroversi video Era FM, Astro Audio menggantung tiga penyampainya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *