KUSKOP நிதி ஒதுக்கீடு கண்காணிக்க EPMS முறைமை அமல்
- Tamil Malar (Reporter)
- 05 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 5-
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு (KUSKOP) கீழ் உள்ள நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தொழில் முனைவோர் திட்ட கண்காணிப்பு முறைமை (EPMS) என்ற மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளம் பயன்படுத்தப்படுகிறது.
துணை அமைச்சர் டத்தோ முகமட் அலாமின், இந்த முறைமை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் அரசின் ஒவ்வொரு உதவித் திட்டத்திற்கும் வழங்கப்படும் நிதி எந்த வகையில் செலவிடப்படுகிறது என்பதையும், திட்டங்களின் செயல்திறன் மற்றும் முடிவுகளையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.
மேலும், உதவித் திட்டங்கள் எங்கு போதிய அளவில் சென்றடையவில்லை என்பதை கண்டறிந்து, அந்த இடங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள EPMS உதவும் என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் வழங்கும் உதவிகள் இலக்கை அடையாமல் போகக் கூடாது. அவை உண்மையிலேயே அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தி, தொழில் முனைவோரின் வருமானத்தை நேரடியாக உயர்த்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



