சம்சூரி குறித்த அறிக்கை கிடைத்தது! - சபாநயகர் அலுவலகம் உறுதி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 18: பெரிகாத்தான் நேஷனல்  கூட்டணியிடமிருந்து, அகமட் சம்சூரி மொக்தார் புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்த அறிவிப்பைப் பெற்றதாக  நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

கெமாமன் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, பெரிக்காத்தான் நேஷனல் தலைமைக் கொறடாவின் அலுவலகத்திலிருந்து இன்று காலை சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பைப் பெற்றது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கூட்டணியின் உச்ச மன்றம் சம்சுரியை புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் அறிவித்தார்.

கட்சித் தலைவர் முஹைதீன் யாசினுடனான தலைமைப் போட்டிக்கு மத்தியில், கடந்த பிப்ரவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாக சம்சூரி இந்தப் பதவியைப் பெறுகிறார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *