FRU வேன் - டிப்பர் லாரி கோர விபத்து தொடர்பான அறிக்கை வெளியானது!
- Shan Siva
- 31 Oct, 2025
புத்ராஜெயா, அக் 31: கடந்த மே மாதம் 13 ஆம் தேதி
ஜாலான் செகாஸ்–சுங்கை லாம்பாம், தெலுக் இந்தானில், சரளைக் கற்கள்
ஏற்றப்பட்ட லாரியும், FRU லாரியும் மோதிய விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த இறுதி அறிக்கையை
போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விபத்துக்கு முதன்மையான காரணம், சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த எடையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்
விளைவாக, கட்டுப்பாட்டை இழந்து, ஈப்போவுக்குத் திரும்பிக்
கொண்டிருந்த FRU லாரியுடன் மோதியது.
பிரேக்கிங் அல்லது ஸ்டீயரிங் அமைப்புகளில் எந்த இயந்திரக் கோளாறுகளும்
கண்டறியப்படவில்லை என்று அறிக்கை கூறியது.
லாரி ஆபரேட்டரின் பலவீனமான உள் மேற்பார்வை மற்றும் செயல்படும் GPS கண்காணிப்பு அமைப்பு இல்லாதது
உள்ளிட்ட செயல்பாட்டு மற்றும் இணக்கக் காரணிகளால் இந்த விபத்து ஏற்பட்டது என்று
அது கூறியது.
முழு அறிக்கையும் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mot.gov.my யில் காணலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



