தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம்! - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வழங்கினார்

top-news
FREE WEBSITE AD

செராஸ், அக் 30: இன்று செராஸ் தமிழ்ப் பள்ளியின் 60 மாணவர்களுக்கு ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தலைக்கவசம் வழங்கினார்.

இது பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக என்றும், இந்த இயக்கத்தின் நோக்கம், குழந்தைகள் சாலையில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகும் என்றும் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

இந்த தலைக்கவசம் பெற்ற மாணவர்கள் சாலை விதிகளைப் பின்பற்றவும், தங்களின் பெற்றோருக்கும் அதனை அணிவதின் அவசியத்தை நினைவூட்டவும் வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மாணவர்களின் உற்சாகமும், பாதுகாப்பு குறித்த அவர்களின் புரிதலும் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *