வார்த்தக வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் பயன்படுத்துக் கொள்ள வேண்டும் துணை அமைச்சர் சரஸ்வதி வலியுறுத்தல்!

top-news
FREE WEBSITE AD

(கு.தேவேந்திரன்)

கோலாலம்பூர், நவ. 6-

மலேசிய இந்தியர்கள் வர்த்தகத்துறையில் அதிகமான வாய்ப்புகளை பெற வேண்டும். குறிப்பாக இந்திய இளைஞர்கள் அதிகமாக வர்த்தக வாய்ப்புகளை பெற்று முன்னேற வேண்டும் என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக் கொண்டார்.

மலேசிய நகரத்தார் வர்த்தகச் சபையும் தென்னிந்திய கொங்கு வர்த்தக சபை ஏற்பாட்டில் நேற்று முன்தினம் தலைநகரில் உள்ள ஒரு தங்கு விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செனட்டர் சரஸ்வதி பேசினார்.தமிழ்நாட்டிலிருந்து 30 பேராளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நகரத்தார் வர்த்தக சபையின் தலைவர் டத்தோ இராமநாதன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அவர் மேலும் பேசுகையில், மலேசிய - இந்திய வர்த்தக உறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் எப்படி வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று பேசும் போது சிலர் கூறினர். நிச்சயமாக இந்தக் காலகட்டம் சாத்தியமானதுதான் என்றார் அவர். கோலாலம்பூர் வர்த்தகச் சங்கம் 1928இல்
ஆரம்பிக்கப்பட்டது என்று இங்கு பேசினர். ஆனாலும் 1924ஆம் ஆண்டில் பினாங்கு வர்த்தகச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த 100 ஆண்டு காலத்தில் மலேசியா - இந்தியா வர்த்தகத் தொடர்பு இருந்து வந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அது பொற்காலம் என்று கூறலாம். இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு உங்கள் பெயரிலேயே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தொழில் தொடங்கலாம் என்று வர்த்தகச் சங்கத்தலைவர் டத்தோ இராமநாதன் கூறியிருந்தார்.அப்படி என்றால் என்ன வர்த்தகம் செய்யலாம் என்று வர்த்தகர்கள் சிந்திக்கலாம். மலேசிய - இந்திய அரசாங்கங்கள் வர்த்தக உடன்படிக்கை செய்து வருகின்றன. அதை ஒரு வளர்ச்சியாக நாம் பார்க்கின்றோம். அதைத்தவிர என்ன முயற்சியில் ஈடுபடலாம் என்கிற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொருளாதாரத்தில் இந்தியா துரித வளர்ச்சி அடைந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. உலகத்தில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 10ஆவது இடத்தில் உள்ள இந்தியா இன்று பொருளாதாரத்தில் 3ஆவது இடத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த துரித வளர்ச்சியில் இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள மலேசியா, அதனோடு சேர்ந்து பயன்பெறவில்லை என்றால் வேறு யார்தான் பயன்பெற முடியும் என்று செனட்டர் சரஸ்வதி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மலேசிய நகரத்தார் வர்த்தகச் சங்கத்தலைவர் டத்தோ இராமநாதன் செட்டியார். மலேசியா - இந்தியா என இருநாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத் தொடர்புகளையும் அதன் வாய்ப்புகளையும் பெற வேண்டுகோள் விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *