பேரா அரசாங்கம் விரைவில் இந்துக்களுக்கு "முருகன் மாநாடு நடத்தவுள்ளது!
- Muthu Kumar
- 26 Aug, 2025
(டிகே.மூர்த்தி)
சுங்கை சிப்புட், ஆக.26-
இங்குள்ள ஈவூட் கெமரி தோட்டத்து அருள்மிகு மாரியம்மன் ஆலயம் வெ. 2லட்சம் செலவில் புதுபிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கோவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. இதற்கான செலவுக்கு மத்திய ஊராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சகத்தின் சார்பில் வெ.1 லட்சத்து 7 ஆயிரம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு சிவநேசன் சிறப்பு வருகை அளித்திருந்தார். பேரா மாநில அரசின் சார்பில், ஆலய நிர்வாகத்திடம் இந்திய சமூக நல விவகாரத்திற்கு தலைமை வகிக்கும், ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் வெ.60ஆயிரத்துக்கான மாதிரி காசோலையை வழங்கினார். மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து மொத்தம் வெ. 1 லட்சத்து 67 ஆயிரம் மானியம் வழங்கின.
இது குறித்து சிவநேசன் கூறுகையில், இக்கோயில் சீரமைப்பு மேம்பாட்டுப் பணிக்காக ஆலய நிர்வாகம் வெ. 2 லட்சம் செலவிட்டுள்ளது. அச்செலவில், 70 சதவீதம் ரிங்கிட்டை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.மீதமுள்ள 30 சதவீதம் மட்டுமே கோயில் நிர்வாகம் செலவிட்டுள்ளது என்றார். விரைவில் "முருகன் மாநாடு பெரிய அளவில் மாநில அரசின் சார்பில் நடத்தப்படும். இதற்கான எல்லா செலவுகளையும் மாநில அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது என்றும் சிவநேசன் உறுதிப்படுத்தினார்.
அர்த்தமுள்ள இந்த சமய மாநாடு, இளைய சமூகத்திற்கு ஆன்மீகத்தைப் பற்றிய விழிப்புணர்வு தரவல்லதாகவும் இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை என சிவநேசன் சுட்டிக் காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



