ஆகஸ்ட் 11 முதல் 15 வரை Serdang lay-by சாலை மூடப்படுகிறது
- Shan Siva
- 08 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 8: ஆகஸ்ட் 11 முதல் 15 வரை தெற்கு நோக்கிச் செல்லும் செர்டாங் லே-பை சாலையில் கான்கிரீட் நடைபாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் இரவு நேரங்களில் தற்காலிகமாக மூடப்படும் என்று பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) அறிவித்துள்ளது.
இரவு 10 மணி
முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பணிகளை
எளிதாக்குவதற்காக நுழைவுப் பாதை,
உணவுக் கடைகள் மற்றும்
கழிப்பறை வசதிகள் தற்காலிகமாக மூடப்படும்.
இருப்பினும், பயனர் வசதிக்காக காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சாலை பொதுமக்களுக்கு
திறந்திருக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



