பேரரசரின் உத்தரவை மதிக்கிறோம்! - பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை வாங்கப் போவதில்லை என ஆயுதப்படை அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். ஆக 20: சுமார் RM187 மில்லியன் மதிப்புள்ள நான்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வாங்குவதை ஆயுதப்பட ரத்து செய்துள்ளது.

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அறிவுரைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆயுதப்படைகளின் தலைவர் ஜ டான் ஸ்ரீ முகமது நிஜாம் ஜாஃபர் கூறினார்.

பழைய பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஆணையை ஆயுதப்படைகள் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்,

பிளாக் ஹாக்கை வாங்குவதற்கு தாங்கள் முன்மொழிய மாட்டோம், மேலும் மாமன்னரின் வருத்தத்தை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்  என்று அவர் கூறினார்.

முன்னதாக அவ்வகை ஹெலிகாப்டர்கள் பறக்கும் சவப்பெட்டி, அதனை வாங்கக்கூடாது என மாம்மன்னர் நேற்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *