பிபா தடைகளில் இந்தோனேசியாவுக்கு சம்பந்தம் இல்லை- இந்தோனிசியா கால்பந்து சங்கத் தலைவர்
- Tamil Malar (Reporter)
- 30 Sep, 2025
பெட்டாலிங் ஜெயா, அக். 1-
செய்தி-வெற்றி மைந்தன்
இந்தோனேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் எரிக் தோஹிர், மலேசிய கால்பந்து சங்கம், ஏழு கலப்பு பாரம்பரிய
ஹரிமாவ் மலேயா வீரர்கள் மீது பிபா விதித்த தடைகளில்
இந்தோனேசியா ஈடுபட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26), ஜூன் மாதம் ஆசியக்
கோப்பை தகுதிச் சுற்றில் மலேசியா-வியட்நாம் இடையேயான ஆட்டத்தில் ஆவணப்
பிரச்சினைகள் காரணமாக பிபா அபராதம் விதித்து, வீரர்களான பாகுண்டோ கார்செஸ், ஜான் இராசபால்,
ரோட்ரிகோ ஹோல்காடோ, இமானோல் மச்சுக்கா,
ஹெக்டர் ஹெவல், ஜோவோ பிகுரெய்டோ, கேப்ரியல் பால்மரோ ஆகியோருக்கு ஒரு வருடம் போட்டிகளில் பங்கேற்க தடை
விதித்தது.
ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னர்,
சில தரப்பினர் இந்தோனேசியா இந்த முடிவில் தலையிட்டதாக குற்றம்
சாட்டினர். இந்தோனேசியாவின் இளைஞர், விளையாட்டு அமைச்சருமான
எரிக், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து, இந்தோனேசியாவுக்கு இதில் எந்தவித ஈடுபாடும் இல்லை என்று வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



