“இந்திய வாக்காளர்களின் ஆதரவை பெரிக்காத்தானால் பெற முடியாது”!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 30-

இந்திய சமூகத்தின் ஆதரவைப் பெரிக்காத்தான் நேஷனல் பெற வேண்டுமென்றால் அச்சமூகத்தின் உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் ஒத்துழைக்க அக்கூட்டணி முன்வர வேண்டும். இல்லையெனில் இந்தியர்களின் ஆதரவை அக்கூட்டணி பெறமுடியாது என்று “உரிமை” கட்சியின் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சமூகம் அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டிருந்தபோதிலும், எதிர்க்கட்சியினரின் ஒருமித்த ஆதரவு அவர்களுக்கு கிடைக்காது என்று சிலாங்கூர் மாநில உரிமை கட்சியின் தலைவர் கே. குணசேகரன் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை பெரிக்காத்தான் சார்பில் நடைபெற்ற "தூருன் அன்வார்" பேரணியில் மலாய்க்காரர்கள் மட்டுமே திரளாகக் கலந்து கொண்டனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

உண்மையான அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவைக் கொண்ட "அசல் இந்திய தலைமைத்துவத்தை" அங்கீகரிக்க அந்த எதிர்க்கட்சி கூட்டணி தவறியுள்ளது என்றும் அவர் கூறினார். தற்போதைய மடானி அரசாங்கத்தின் செயல்பாடு மீது இந்திய சமூகம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. அதே வேளையில், பெரிக்காத்தான்நேஷனலை ஆதரிக்கவும் அவர்கள் தயாராக இல்லை. உண்மையான தலைமைத்துவத்தை
அங்கீகரிக்கப் பெரிக்காத்தான் தவறியதுதான் இதற்குக் காரணமாகும் என்றார்.

மலாய்க்காரர்கள் மட்டும் பெருவாரியாகத் திரண்டிருந்த அன்வார் எதிர்ப்பு பேரணியில், இந்திய சமூகத்தின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறாத இரண்டு தலைவர்கள் பேசினர். அவர்களின் வருகை இந்தியர்களிடம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் குணசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *