2028ஆம் ஆண்டு வரை பெர்லி-தினா கூட்டணி மலேசியப் பூப்பந்து குழுவில் நீடிக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 9-

மலேசியாவின் முதன்மை பெண்கள் இரட்டையர் பூப்பந்து ஜோடியான பெர்லி, தினா ஆகியோர் மலேசிய பூப்பந்து சங்கத்துடன் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி வரை தொடர்ந்து இருப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த முடிவு, கடந்த டிசம்பரில் அவர்களது முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பூப்பந்து சங்கத்தின் தலைவர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸாப்ருல் அப்துல் அஜிஸ், அண்மையில் புக்கிட் கியாராவில் பெர்லி, தினாவுடன் பேச்சுவார்த்தைக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் ஜப்பான் ஓபன் முன்னதாக இறுதி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த முடிவு, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவின் அறிவுறுத்தலுக்கு இணங்க, வீரர்களின் கவனத்தையும் நிலைத்தன்மையையும் பராமரிக்க வேண்டிய அவசியத்தை பூப்பந்து சங்கம் ஏற்றுக்கொண்டதைப் பிரதிபலிக்கிறது.

இவ்விரு வீராங்கனைகளின் கூட்டணி, உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளனர். 2025 தாய்லாந்து ஓபனில் வெற்றி பெற்ற, வரலாற்றில் முதல் மலேசிய பெண்கள் இரட்டையர் ஜோடியாக இவர்கள் உருவெடுத்தனர். மேலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய பெண்கள் இரட்டையர் ஜோடியாக வரலாறு படைத்தனர்.

இவர்களின் பயிற்சியாளர் ரோஸ்மான் ரசாக். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வதற்கு இவர்களை தயார்படுத்துவதற்கு முழு அர்ப்பணிப்புடன் உள்ளார்.இந்த ஜோடி தொடர்ந்து தேசிய அணியில் இருப்பது எதிர்கால வெற்றிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பெர்லி-தினா கூட்டணி இப்போது ஜப்பான் ஓபன், வரவிருக்கும் பெரிய போட்டிகளில் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராக உள்ளனர்.

Beregu wanita utama Malaysia, Pearly-Dhina, menandatangani kontrak dengan Persatuan Badminton Malaysia hingga Olimpik 2028. Mereka kini tumpuan negara, berada di ranking ke-4 dunia, dan bersedia untuk kejohanan besar seterusnya selepas kejayaan di Olimpik Paris 2024.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *