பெர்லிஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்! - பாஸ் அதிரடி
- Shan Siva
- 30 Dec, 2025
கோலாலம்பூர், டிச 30: பெர்சாத்துவின் அபு பக்கார் ஹம்சா புதிய மந்திரி பெசாராக பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, தற்போது ஆட்சிக்குழு உறுப்பினர்களாகப் பணியாற்றி வரும் பாஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ராஜினாமா செய்வார்கள் என்று பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் பெர்லிஸில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்த சுக்ரி ராம்லிக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில், பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மாநில அரசாங்கத்தில் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹாசன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபு பக்காரின் புதிய வரிசையில் எந்த ஆட்சிக்குழு பதவியையும் பாஸ் மறுக்கும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், கடந்த தேர்தலில் நாங்கள் பெற்ற ஆணைக்கு ஏற்ப மாநில அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



