பெர்லிஸ் மந்திரி பெசார் ராஜினாமா!
- Shan Siva
- 26 Dec, 2025
கோலாலம்பூர், டிச 26: பாஸ் கட்சியின் சங்லாங் சட்டமன்ற உறுப்பினர் சுக்ரி ராம்லி, உடல்நலப் பிரச்னையைக் காரணம் காட்டி, பெர்லிஸ் மந்திரி பெசார் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பெர்லிஸ் ராஜாவால் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், உடல்நலம் காரணமாக பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் வெளிப்படுத்தியதாகவும் சுக்ரி கூறினார்.
நேற்று நண்பகல் பெர்லிஸ் ராஜாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும், தனது விருப்பத்தை பரிசீலிப்பதை அவரது மாட்சிமைக்கு முழுமையாக விட்டுவிடுவதாகவுன் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நேற்று உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட, எட்டு பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து அவரது ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
15 உறுப்பினர்களைக் கொண்ட பெர்லிஸ் சட்டமன்றத்தில் ஆறு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே சுக்ரி பெற்றதால், அவர் பெரும்பான்மை ஆதரவை இழந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



