பெர்னாமாவிற்கு மலேசிய பொறியியலாளர் வாரியத்தின் விருது!
- Muthu Kumar
- 24 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.24-
2025 மலேசிய பொறியியலாளர் வாரியத்தின் விருதுகள் மற்றும் பாராட்டு விருந்துபசரிப்பில், மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவிற்கு ஊடக விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பொறியியல் தொழில்துறையில் பங்காற்றுபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பாராட்டும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு கோலாலம்பூரில் இவ்விழா நடைபெற்றது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப்பிடமிருந்து பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் அவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.இவ்விருது நிகழ்ச்சியில் பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜும் கலந்துகொண்டார். இதே நிகழ்ச்சியில், டத்தோ டாக்டர் சைனி உஜாங்கிற்கு தேசிய பொறியியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



