பெர்சாத்து எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல! இது நல்லதல்ல!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 17: மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசால் வான் அகமது கமல் தனது இடைநீக்கம் மற்றும் தசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்திலிருந்து கடிதங்களைப் பெற்றதாக வான் ஃபைசால் கூறினார்.

வாரியம் பாரபட்சமாகவும் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் நான்கு உறுப்பினர்களில் இருவர் பெர்சாத்துவின் உயர் மட்டத் தலைவர்களுடன் குடும்ப அல்லது தொழில்முறை உறவுகளைக் கொண்டுளதாக அவர் கூறினார்.

அவர்கள் தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வான் அஹமது ஃபைசால் கூறினார்.

இது தொடர்பாக மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு வாரியத்தின் முடிவு மற்றும் அடிப்படைகளைப் படிப்போம் என்று வான் சைஃபுல் கூறினார் தாங்கள் "சத்தியத்தின் பக்கம்" இருப்பதாக அவர் கூறினார்!

சிலர் தங்கள் பதவிகளையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், ஆனால் நாங்கள் இந்த செயல்முறையை முறையாக மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *