பெர்சாத்து, பெரிக்காத்தான் நேஷனலை விட்டு வெளியேற வேண்டும்! - பேராசிரியர் ராமசாமி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை15: உரிமை கட்சியின் தலைவர் பி. ராமசாமி, பாஸ் கட்சியின் அணுகுமுறையை கருத்தில் கொண்டு, பெர்சாத்து கட்சி உடனடியாக பெரிக்காத்தான் நேஷனல்  கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தனது ஃபேஸ்புக் பதிவில், பாஸ் கட்சி இரண்டு முக்கிய அம்சங்களில் பெர்சாத்துவைப் பாதித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். திட்டமிட்ட தாக்குதல்களின் மூலம் இரு கட்சிகளுக்கிடையேயான உறவை முறித்ததோடு, ஜொகூர் தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவு அளித்தது பெர்சாத்துவுக்கு செய்த துரோகம் என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் பெரிக்காத்தான் நேஷனலின் மற்ற கூட்டணிக் கட்சிகளை பலவீனப்படுத்தியுள்ளதுடன், அந்த கூட்டணி தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், பாரிசான் நேஷனலுக்கு மாற்றாக செயல்படும் வலிமையை இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத் தேர்தல்களில் பாரிசான் நேஷனலும் பக்காத்தான் ஹராப்பானும் ஆகிய இரு கூட்டணிகளையும் எதிர்கொள்ளக்கூடிய புதிய அரசியல் கூட்டணியை பெர்சாத்து உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

உரிமை உள்ளிட்ட பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெளியேயுள்ள எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இகாத்தான் பிரிஹாத்தின் ரக்யாட் என்ற தளர்வான கூட்டணி, புதிய பெரிய எதிர்க்கட்சி கூட்டணிக்கான தளமாக அமையக்கூடும் என்றும் ராமசாமி கூறினார்!      

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *