பெர்சாத்து உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்! - பாஸ் துணைத் தலைவர் வலியுறுத்து
- Shan Siva
- 26 Dec, 2025
கோலாலாம்பூர், டிச 26: பெர்லிஸில் சுக்ரி ராம்லிக்கு மந்திரி புசார் பதவியில் இருந்து ஆதரவை விலக்கிக் கொள்வதற்காக சட்டப்பூர்வ பிரகடனங்களில் (SDs) கையெழுத்திட்டதாகக் கூறப்படும் பெர்சாத்துவின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அழைப்பு விடுத்துள்ளார். பாஸ் கட்சி அதன் சொந்த பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனலில் (PN) உள்ள அதன் சக கூட்டணி கட்சிக்கு மரியாதை செலுத்துவதற்கான அடையாளமாகவும், கூட்டணிக்குள் ஒழுக்கம் மற்றும் உறவுகள் அப்படியே இருப்பதை உறுதிசெய்யவும் பெர்சத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று துவான் இப்ராஹிம் ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமை ஆதரித்ததற்காக முன்னாள் நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் அசிசி அபு நயீமை பதவி நீக்கம் செய்த கடந்த ஆண்டு பெர்சாத்துவின் முடிவை துவான் இப்ராஹிம் நினைவுபடுத்தினார், இது கிளந்தான் மாநிலத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வழி வகுத்தது.
பெர்லிஸில் நடந்தது நெங்கிரியை விட மிகவும் தீவிரமானது, ஏனெனில் அது PN மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நேரடியாகப் பாதித்தது.
இப்போது பெர்சத்து அதன் பிரதிநிதிகளுடன் சரியானதைச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



