சுங்கை ரமால் சட்டமன்ற இந்திய மக்களுக்கு சேவைகள் தொடரும்: ஹாஜி மஸ்வான் ஜோஹோர் தகவல்!

top-news
FREE WEBSITE AD

சுங்கை ரமால் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள இந்திய மக்களின் தேவைகள் அறிந்து அதற்கான சேவைகள் தொடரும் என்று கங்கை ரமால் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஜி மஸ்வான் ஜோஹோர் கூறினார்.

எட்டாம் ஆண்டாக ஜோம் ஷோப்பிங் தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். கங்கை ரமால் பி40 பிரிவைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பெரிதும் உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற சேவைகள் வட்டார மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் சுபிட்சத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பாரம்பரிய விழாக்களைத் தொடர்ந்து கொண்டாடிடும் சமுதாயமாக திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஜோம் ஷோப்பிங் தீபாவளி பற்றுச்சீட்டு உதவி பெற்றவர்கள் சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

பாங்கி லாமா, சுங்கை ரமால் இந்திய மக்கள் நல மேம்பாட்டுக்காக கங்கை ரமால் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஜி மஸ்வான் ஜோஹோர் அவரது மக்கள் சேவை மிகவும் போற்றத்தக்கது என சுங்கை ரமால் இந்திய மேம்பாட்டு கிராமத்துத் தலைவர் சிவகுமார் அருணாசலம், அவரது சிறப்பு அதிகாரி கே. பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *