ராஜினாமாக்களால் பெர்சாத்து பாதிப்பு - மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும்! - முகைதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 22:: பெர்சாத்து கட்சித் தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் ராஜினாமாவால் பாதிக்கப்பட்ட அதன் பல பிரிவுகளை மறுசீரமைத்து வருவதாகக் கட்சித் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரிவுகளின் மறுசீரமைப்பில் செயல் தலைவர்கள் அல்லது புதிய குழுக்களை அமைப்பது அடங்கும் என்று முகைதீன் கூறினார்.

கட்சியை வலுப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்க பெர்சாத்து ஒவ்வொரு பிரிவிலும் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.

கட்சியின் போராட்டத்திற்கு விசுவாசமாக இருக்கும் பல பெர்சாத்து உறுப்பினர்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முன்வருவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கட்சி துணைத் தலைவரின் கடமைகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அஹ்மத் பைசல் அசுமு மற்றும் ரட்ஸி ஜிடின் ஆகியோரின் தலைமையில் ஒரு பணிக்குழு மறுசீரமைப்பை மேற்பார்வையிட அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச் செயலாளர் அஸ்மின் அலி அதன் செயலகத்தை மேற்பார்வையிடுவார் என்றும் முகைதீன் கூறினார்.

ராஜினாமாக்களால் பாதிக்கப்பட்ட பிரிவுகளை அடையாளம் காண மாநிலத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *