பிரதமர் தேர்வு பற்றி இரு கட்சிகளின் முடிவுகளை மதியுங்கள்! - பாஸ் உதவித் தலைவர் வேண்டுகோள்
- Shan Siva
- 19 Sep, 2025
கோலாலம்பூர், செப் 19: பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மத், பாஸ் மற்றும் பெர்சாத்து சமீபத்தில்
நடத்திய முக்கியக் கூட்டங்களில் எடுத்த முடிவுகளை எல்லா தரப்பினரும் மதிக்க
வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாஸ் தனது சமீபத்திய முக்தமாரில் (செப்டம்பர் 7) பெரிக்காத்தான் நேஷனலை வழிநடத்தி பாஸ் சார்பில் பிரதமர் வேட்பாளரை
நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு முன் பெர்சாத்து தனது
பொதுக்கூட்டத்தில் தலைவர் முஹ்யிதீன் யாசீனை அடுத்த பொதுத்தேர்தல் (GE16) பிரதமர் வேட்பாளராக நியமித்திருந்தது.
இரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான முடிவுகளை எடுக்க உரிமையுள்ளவை என்பதை
அனைவரும் மதிக்க வேண்டும் என்று இட்ரிஸ் தனது அறிக்கையில் கூறினார்.
16 வது பொதுத் தேர்தலுக்கான முன்னெடுப்பில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து இணைந்து
செயல்பட உறுதியுடன் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
பெரிக்காத்தானின் ஒற்றுமையே அதன் மிகப்பெரிய பலம் எனவும், ஒற்றுமையுடன்
இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மலேசியர்களை பாதிக்கும் முக்கிய
பிரச்சினைகளுக்கு சிறந்த மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்கும் என்பதில் நம்பிக்கை
உள்ளதாகவும் அவர் கூறினார்.
வீடமைப்பு, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள்
சலுகைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் பெரிக்காத்தான் கவனம் செலுத்தத் தொடர வேண்டும் என்றும் இட்ரிஸ்
வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



