எஸ்தெவோ வில்லியனின் அபார கோல் – செல்சி 3-0 கோல்கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

லண்டன், நவ. 26-

ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில், செல்சி அணி 10 பேர் மட்டுமே கொண்டு விளையாடிய பார்சிலோனாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் எஸ்தெவோ வில்லியன் (18), லமீன் யமால் (18) இடையிலான “டீனேஜ் சூப்பர்ஸ்டார்” மோதல் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், எஸ்தெவோவே மைதானத்தின் நாயகனாக உருவெடுத்தார்.

முதல் பாதியில் கோல் இல்லாமல் முடிந்த நிலையில், இரண்டாம் பாதியின் 55-ஆவது நிமிடத்தில் எஸ்தெவோ மேஜிக் செய்தார். வலது புறத்தில் பந்தைப் பெற்றுக்கொண்ட அவர், பார்சிலோனாவின் இரு தற்காப்பு ஆட்டக்காரர்களை எளிதில் ஏமாற்றி, பின்னர் இடது காலால் பலமாக அடித்த பந்து கோல் கீப்பர் ஜோவான் கார்சியாவின் வலையில் பாய்ந்து கோலானாது. இது ரசிகர்களை எழுந்து நின்று கைதட்ட வைத்த அற்புதமான சோலோ கோல்!

இந்த சீசனில் செல்சி மற்றும் பிரேசில் தேசிய அணிக்காக எஸ்தெவோவின் 10-ஆவது கோல் இது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *