பிரதமரின் பதவிக் காலத்தை கட்டுப்படுத்த விரிவான ஆய்வுகள் தேவை!

top-news
FREE WEBSITE AD

தாப்பா, மார்ச் 19-

பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்த, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமானால், அதற்கு தெளிவான, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதமரின் பதவிக் காலத்தை நீட்டித்தால், அதிகார மீறல் ஏற்படுவதற்கு இடமளிக்கும் என்பதால், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலர் கருதுவதாக பேராக் மந்திரி புசார் டத்தோஸ்ரீ சராணி முஹமட் கூறுகின்றார்.

ஆனால், அந்தப் பதவியில் இருப்பவர் நல்லவர் எனவும் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் என்றும் கூறுபவர்களும் உள்ளனர். ஒருவேளை முதல் இரண்டு தவணைகள் முன்னேற்றத்திற்கான காலகட்டமாக இருக்கலாம். முதல் பதவிக்காலம் சுமுகமாகப் பயணிக்கிறது. இரண்டாவது பதவிக்காலம் அப்போதுதான் தொடங்குகிறது.

எனவே, அவரைப் பாதியிலேயே நிறுத்தினால். அவருக்கு மாற்றாக வருபவர் திட்டமிட்டதைத் தொடர முடியுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. எனவே இதில் நன்மை தீமை என இரண்டும் உள்ளன," என்றார் அவர்.நேற்று. பேராக் தாப்பாவில் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்த உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் டத்தோஸ்ரீ சராணி முஹமட் அவ்வாறு கூறினார்.

பிரதமரின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் ஆலோசனையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக பரிந்துரைத்திருந்தார்.

Menteri Besar Perak, Datuk Seri Saarani Mohamad, menyatakan bahawa sebarang pindaan Perlembagaan Persekutuan untuk mengehadkan tempoh jawatan Perdana Menteri kepada 10 tahun perlu dikaji secara terperinci. Beliau menjelaskan bahawa had tempoh boleh mengelakkan penyalahgunaan kuasa, tetapi pada masa yang sama, ia mungkin menghalang kesinambungan dalam pentadbiran. Cadangan ini sebelum ini telah dikemukakan oleh Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *