காலி சேர்களை பார்த்து பேசிய நெதன்யாகு.. ஐநா சபையில் அவமானம்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐநா பொதுசபை கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாடினார்.ஆனால் அவரது பேச்சை கேட்க மறுப்பு தெரிவித்து, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நெதன்யாகு பேசுகையில் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நெதன்யாகு பேச மேடைக்கு வந்தபோது, கிட்டத்தட்ட 70% நாற்காலிகள் காலியாவிட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள நெதன்யாகுவுக்கு, அமெரிக்க தவிர வேறு சில நாடுகள் மட்டுமே நட்பாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த 600 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில், இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம்.

எனவே போரை நிறுத்த வேண்டும் என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வந்தன. ஆனால், நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. மட்டுமல்லாது பாலஸ்தீனத்தை நாங்கள் முழுமையாக கைப்பற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து சர்வதேச நாடுகள், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க தொடங்கின. ஒரு காலத்தில் இஸ்ரேலின் நட்பு நாடாக இருந்த பிரிட்டன் கூட இப்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்து இருக்கிறது.

இஸ்ரேலும், அமெரிக்காவும் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகள் மட்டுமே பாலஸ்தீனத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் இன்று ஐநா சபையில் பேச வந்த நெதன்யாகுவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *