ஓய்வுபெறும் கே9 மோப்ப நாய்களை வளர்ப்புப் பிராணிகளாகத் தத்தெடுக்க அனுமதி!

top-news
FREE WEBSITE AD

அலோர்ஸ்டார், செப். 8 -

ஒரு புதிய புக்கிட் அமான் திட்டத்தின் கீழ், சேவையிலிருந்து ஓய்வு பெறும் போலீசாரின் கே9 மோப்ப நாய்களை வளர்ப்புப் பிராணிகளாக தத்து எடுக்க, சுமார் 60 ஆண்டுகள் சரித்திரத்தில் முதன் முதலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைச் சேவை இலாகாவின் அறிவுரையின் அடிப்படையில், குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் (சிஐடி) டி6 பிரிவினால் இந்த தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக, அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறியது.

"கடந்த 1968ஆம் ஆண்டில் கே9 பிரிவு உருவாக்கப்பட்டது முதல் 57 ஆண்டு காலகட்டத்தில், சேவையிலிருந்து ஓய்வு பெறும் கே9 பிரிவு நாய்கள் வளர்ப்புப் பிராணிகளாக தத்தெடுக்க அனுமதிக்கப்பட்டு இருப்பதன் காரணத்தினால், இது ஒரு சரித்திரப்பூர்வமான திட்டமாகும்.

"சேவையிலிருந்து ஓய்வு பெறும் கே9 நாய்களின் சுகாதாரம் மற்றும் நலன்களை உண்மையிலேயே பாதுகாக்கும் தகுதி மற்றும் திறமையைக் கொண்டிக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்தும் கடுமையான சோதனையும் இந்தத் திட்டத்தில் அடங்கும். அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும்.

“இதில், அந்த ஜீவன்களை கையாளுபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அடுத்து போலீஸ்காரர்கள் அதற்கடுத்துதான் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்று, கெடா போலீசாரின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் அவ்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் தொடக்கமாக, செக்கோஸ்லாவியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு “கோரான்” என்று பெயரிடப்பட்டிருக்கும் எட்டு வயதுடைய ஜெர்மன் ஷெப்பர்ட் கே9 நாய், பேராக் சிஐடி தலைமையகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் லீ ஷெங் வேயிடம் தத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.“கடந்த 2024ஆம் ஆண்டில் சேவையிலிருந்து ஒய்வு பெறுவதற்கு முன்னர் கோரான் ஆறு ஆண்டுகளாக சேவையில் இருந்துள்ளது.

“தனது சேவை காலத்தின்போது, கோரான் மிகச் சிறப்பாக பணியாற்றி பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது. குற்றச் செயல்கள் நடந்திருந்த 60 இடங்களை அது கண்டு பிடித்திருந்தது. 213 குற்றச் செயல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. 40 பொது ஒழுங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தது.

“கடந்த 2024ஆம் ஆண்டில் கெடா, கோல கெட்டில், பிஞ்ஜுல் லுவார், கம்போங் பத்து 7இல் நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்கு தீர்வு காணுவதில் கோரான் முக்கிய பங்கை ஆற்றி இருக்கிறது” என்று கூறிய அவ்வறிக்கை, தனது இத்தகைய சிறந்த சேவை மூலம் தன்னைக் கையாண்டு வந்த கோப்பரல் எம். சிவபாலனுக்கும் அது சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் கே9 பிரிவுகளை வலிமைப்படுத்துவதற்காக ஈராண்டுகளுக்கு ஒரு முறை 25 புதிய கே9 நாய்களைப்பெற சிஐடி பிரிவுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *