பெட்ரோல் - டீசல் விலை குறைகிறது!
- Shan Siva
- 08 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 7: அடுத்த வாரம் முதல் தீபகற்ப மலேசியாவில் மானியமில்லா RON95, RON97 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி,
RON97 பெட்ரோல் லிட்டருக்கு 5 காசு குறைந்து RM3 வெள்ளி 11 காசாக விற்கப்படும்.
மானியமில்லா RON95,
2 காசு குறைந்து
லிட்டருக்கு RM2 வெள்ளி 54 காசாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை 5 காசு குறைந்து RM2வெள்ளி 89 காசுக்கு
விற்கபடும்.
இதனிடையே,
Budi95 திட்டத்தின் கீழ்
வழங்கப்படும் RON95 மானிய பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 வெள்ளி என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும்.
சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசல் விலை, லிட்டருக்கு RM2 வெள்ளி 15 காசு என்றே
நீடிக்கும்.
இந்த புதிய விலைகள் ஜனவரி 14 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



