பெட்ரோல் - டீசல் விலை 5 காசு உயர்வு
- Shan Siva
- 26 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 26: மேற்கு மலேசியாவில் RON97 பெட்ரோல், மானியம் இல்லாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ஐந்து சென் உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
RON97 ரக பெட்ரோல் லிட்டருக்கு RM3.15க்கு சில்லறை விற்பனை செய்யப்படும். இது லிட்டருக்கு RM3.10 இல் இருந்து உயர்த்தப்படும். அதே நேரத்தில் மானியம் இல்லாத RON 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு RM2.54க்கு பதிலாக RM2.59க்கு விற்கப்படும்.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM2.99 இலிருந்து RM3.04 ஆக உயர்த்தப்படும்.
நாடு முழுவதும் மானிய விலையில் கிடைக்கும் RON95 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99 ஆகவும், கிழக்கு மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் தொடரும்.
இந்த விலைகள் மார்ச் 4 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



