இன்று முதல் பெட்ரோல் 25 சென் குறைகிறது!
- Shan Siva
- 16 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 16: இன்று முதல் நாடு முழுவதும் RON97 மற்றும் மானியமில்லாத RON95 பெட்ரோல் விலைகள் 25 சென் குறைக்கப்படும். அதே நேரத்தில் மேற்கு மலேசியாவில் டீசல் விலை 75 சென் குறையும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RON97 பெட்ரோலின் விலை தற்போதுள்ள ஒரு லிட்டர் RM5.35-லிருந்து RM5.10 ஆக நிர்ணயிக்கப்படும் என்று ஒரு அறிக்கையில், நிதி அமைச்சகம்கூறியுள்ளது.
இதற்கிடையில், மானியமில்லாத RON95 எரிபொருளின் விலை ஒரு லிட்டர் RM4.27-லிருந்து RM4.02 ஆகக் குறையும்.
மேற்கு மலேசியாவில் டீசல் விலை ஒரு லிட்டர் RM6.72-லிருந்து RM5.97 ஆக நிர்ணயிக்கப்படும்.
BUDI95 திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் RON95 பெட்ரோல் ஒரு லிட்டர் RM1.99 என்ற விலையிலேயே தொடரும். அதே நேரத்தில் சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசல் ஒரு லிட்டர் RM2.15 என்ற விலையிலேயே இருக்கும்.
மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM2.05 ஆகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் விலை ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவும் தொடரும்.
இந்த விலைகள் ஏப்ரல் 22 வரை அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



