உலக பூப்பந்து போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் லெட்சனா!
- Muthu Kumar
- 28 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 28
மலேசியாவின் மகளிர் ஒற்றையர் வீராங்கனை கே. லெட்சனா, உலக பூப்பந்து போட்டியில் எதிர்பார்த்தபடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடைபெற்ற போட்டியில், ஹாங்காங்கைச் சேர்ந்த சலோனி எஸ். மேத்தாவை எளிதாக வீழ்த்தினார். உலக தரவரிசையில் 40-ஆவது இடத்தில் உள்ள லெட்சனா, 76-ஆவது இடத்தில் உள்ள சலோனியை 21-18, 21-8 என்ற நேர் செட்களில், வெறும் 31 நிமிடங் களில் தோற்கடித்தார். இந்த வெற்றி, லெட்சனாவின் சிறப்பான பதிவை மேலும் வலுப்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



