ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் தீபத் திருநாளை கொண்டாடுவோம் - சரஸ்வதி கந்தசாமி!
- Muthu Kumar
- 19 Oct, 2025
நமது இந்துக்கள் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் இந்த தீபத் திருநாளை கொண்டாட வேண்டும் என தேசிய ஒற்றுமைத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல் நமது அறியாமையை நீக்கி முன்னேற்றப் பாதையில் நாம் செல்ல வேண்டும் ஏஐ போன்ற தொழில் நுட்ப காலம் இது. அதுக்கு ஏற்ப நமது ஆற்றலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
காலமெல்லாம் பின்னடைந்த ஒரு சமூகமாக நாம் இருந்துவிடக் கூடாது. இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அனவார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் பல திட்டங்களை அமலாக்கம் செய்துள்ளது.
மடானி அரசாங்கத்தின் வாய்ப்புகளை நம் இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் துணையமைச்சர் சரஸ்வதி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



