தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாடுவோம் - பிரதமர் அன்வார்!
- Muthu Kumar
- 19 Oct, 2025
ஒளித்திருநாளான தீபாவளி திருநாள். வாழ்க்கையில் இருள் என்னும் தீமைகள் யாவும் நீங்கி நன்மைகள் சூழும் ஒளித் திருநாளாகவும் அமைந்துள்ளது. பல்வேறு கலாச்சாரப் பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்ட வளமான குடிமக்கள் எனும் அடிப்படையில், ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கு. பரஸ்பரப் புரிதல், மிதமான போக்கு அனைத்தையும் மேலும் வலுப்படுத்துவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
இத்தருணத்தில், இன ஒற்றுமையை வளர்த்து, பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறிந்து, துன்பத்தில் வாழ்பவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மேலோங்கச் செய்ய வேண்டும். எனவே. இந்தத் தீபாவளி திருநாள் புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாடப்படுவதோடு, அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும், நாட்டின் வளமும் தொடர்ந்து உயர வேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



